Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

Advertiesment
Priyanka Gandhi

Siva

, வியாழன், 31 அக்டோபர் 2024 (13:24 IST)
வயநாடு தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, மலையாளத்தில் தனது சமூக வலைதளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
 இன்று நாடு முழுவதும் தீபாவளி திருநாள் மக்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தனது சமூக வலைதளத்தில் மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
"இருளுக்கு எதிராக ஒளி நிறைந்த தீபத்தின் வெற்றி திருவிழா தீபாவளி, அநீதி, பொய் மற்றும் ஆணவத்துக்கு மத்தியில் நீதி, உண்மை, அடக்கத்தின் வெற்றி திருவிழா தீபாவளி. வண்ணங்கள், விளக்குகள் மற்றும் மகிழ்ச்சியின் திருவிழா தான் தீபாவளி; தூய்மை மற்றும் வழிபாட்டுக்கான நேரம். இது ஒரு பருவம் முடிந்து, அடுத்த பருவத்தை அன்புடன் வரவேற்கும் தீபாவளி ஒரு சிறந்த பண்டிகை. நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்!" என்று தெரிவித்துள்ளார்.
 
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா, மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்; இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதையடுத்து, ராகுல் காந்தியும் நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளி நாளிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!