பிரதமரை நாங்கள் மணிப்பூருக்கு செல்லுங்கள் என்று கூறினோம். ஆனால் பிரதமர் மோடி, கரீனா கபூரை பார்க்கச் சென்றார் என்று காங்கிரஸ் கட்சி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான ராஜ் கபூரின் நூறாவது பிறந்த நாள் அவரது குடும்பத்தினரால் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், இந்த கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவரை ராஜ் கபூர் குடும்பத்தைச் சேர்ந்த ரன்பீர் கபூர், ஆலியா பட், கரீனா கபூர், சையப் அலிகான் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மேலும், ராஜ் கபூர் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார். கரீனா கபூர் குடும்பத்தை பிரதமர் மோடி நேரில் சென்று சந்தித்ததை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
மணிப்பூரில் கலவரம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், அங்கு சென்று நிலவரத்தை கவனியுங்கள் என்று நாங்கள் பிரதமர் மோடியிடம் கூறினோம். ஆனால், 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ள மணிப்பூருக்கு செல்லாமல், கரீனா கபூர் வீட்டில் நடக்கும் கொண்டாட்டத்திற்கு பிரதமர் மோடி செல்வது தேவையா என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.