இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்ற நிலையை நோக்கி தான் மம்தா பானர்ஜி காய் நகர்த்தி வருவதாகவும் அதனால் தான் அவர் இந்தியா கூட்டணியை தலைமையேற்று நடத்த தயார் என்று கூறி இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாஜகவுக்கு எதிராக நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி என்று அமைக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டணியின் தலைவராக தற்போது மல்லிகார்ஜூன கார்கே உள்ளார் ஆனால் இந்தியா கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெறாத நிலையில் அடுத்த தேர்தலுக்குள் நிச்சயம் இந்தியா கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையாக இந்தியா கூட்டணி தலைமை பொறுப்பை ஏற்க தயார் என்று மம்தா பானர்ஜி கூறிய நிலையில் அவருக்கு ஆதரவும் அதிகரித்து வருகிறது. சமாஜ்வாதி ஜனதா கட்சி, தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு கொடுத்துள்ளது.
இந்த நிலையில் இந்தியா கூட்டணியின் தலைவர் ஆகிவிட்டால் மம்தா பானர்ஜி தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறி வருவது காங்கிரஸ் கட்சிக்கும் ராகுல் காந்திக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.