ஜப்பான் நாடு உலகத் தொழில் நுட்பத்தில் முன்னணியில் உள்ளது. அத்துடன் உலக வல்லரசு நாடுகளுக்கு இணையான ஏற்றுமதியிலும் இறக்குமதியில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
கடந்த ஜுலை மாதம் அங்கு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமராகப் பதவி வகித்த ஷின்சோ அபே (63) சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்காக இந்தியாவில் ஒரு நாள் துக்கம் கடைபிடிக்கப்பட்டது.
மறைந்த ஷின்சோ அபேவின் நினைவு அஞ்சலிக்கு ஜப்பான் அரசு ஏற்பாடு செய்திருந்த நிலையில், இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, ஜப்பனௌக்கு நேற்று சென்றிருந்தார்.
அவரை தற்போதைய பிரதமர் புமியோ கிஷி வரவேற்று இரு நாட்டு உறவிஉகள் குறித்துப் பேசினர், பின்னர்ம் மோடி, முன்னாள் பிரதமர் ஹின்சோவின் நினைவு அஞ்சலியில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சி முடிந்த நிலையில் , விமானத்தின் மூலம் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளார் பிரதமர் மோடி.