Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு பாதிரியாரா இருந்துட்டு இப்படி பண்ணலாமா?....கேரளாவில் நடந்த கொடுமை

Webdunia
திங்கள், 8 ஜூலை 2019 (12:37 IST)
கேரளாவில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள ஒரு சிறுவர் இல்லத்தில், ஏழை குடும்ப சிறுவர்களுக்கு தங்குமிடம், கல்வி, ஆகியவைகளை இலவசமாக அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அங்கு சிறுவர் இல்ல நிர்வாகியாக, கிருஸ்துவ பாதிரியார் ஜார்ஜ், எனபவர் வகித்து வந்தார். அவருக்கு வயது 40. அவர் அங்குள்ள சிறுவர்களை பாலியல்ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அடுத்தடுத்து சிறுவர்கள் பலர் அந்த இல்லத்தை விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

அவர்களில் சில சிறுவர்கள், தங்கள் பெற்றோருக்கு தொலைபேசியில், இவ்வாறு பாதிரியார் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லையில் ஈடுபடுகிறார் என்று கூறினர். இதனை தொடர்ந்து ஜார்ஜ் மீது பெற்றோர் புகார் கொடுத்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில், பாதிரியார் ஜார்ஜை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். பாதிரியார்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக பல சம்பவங்கள் இந்தியாவின் பல இடங்களில் நடந்துவந்தாலும், தற்போது கேரளாவில் சிறுவர்களையும் வீட்டுவைக்காமல் பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பர[பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்