Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 2 April 2025
webdunia

கிராமத்திற்குள் வந்த சிறுத்தையை அடித்து கொன்ற மக்கள்: பதறவைக்கும் வைரல் வீடியோ

Advertiesment
சிறுத்தை
, வியாழன், 4 ஜூலை 2019 (13:06 IST)
கர்நாடகாவில் கிராமத்திற்குள் வலம் வந்த சிறுத்தையை, ஊர் மக்கள் அடித்தே கொன்ற பதறவைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் சித்ர துர்கா மாவட்டத்தைச் சேர்ந்த குருபரஹல்லி கிராமத்தில் பல நாட்களாக ஒரு சிறுத்தை கிராமத்திற்குள் வலம் வந்துகொண்டிருந்தது. இதனிடையே மூன்று நாட்களுக்கு முன்பு குருபரஹல்லி கிராமத்தை சேர்ந்த இருவரை சிறுத்தை கடித்துக் கொன்றது.

இதனைத் தொடர்ந்து சிறுத்தையை அடித்து கொல்ல முடிவெடுத்த கிராம மக்களில் குறிப்பிட்ட சில நபர்கள், நேற்று சிறுத்தையை பிடிப்பதற்கு, சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருக்கும் ஒரு தோட்டத்திற்கு பக்கத்தில், கைகளில் கம்புகளுடன் தயாராக இருந்தனர்.

இதனை கேள்விப்பட்ட வனத்துறை அதிகாரிகள், கிராம மக்கள் சிறுத்தையை பிடிப்பதற்காக கூடியிருந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். வனத்துறையினர் வந்த நேரத்தில், சரியாக சிறுத்தையும் தென்பட்டது. உடனே சிறுத்தையை தாக்குவதற்கு தயாராக இருந்த கிராம மக்கள், சிறுத்தையின் மீது தொடர்ந்து பல கற்களை எறிந்தனர். பின்பு சிறுத்தை லேசாக தடுமாறியவுடன் கைகளில் வைத்திருந்த கம்புகளை கொண்டு சிறுத்தையை அடித்தே கொன்றனர்.

கிராம மக்கள் சிறுத்தையை தாக்குவதை, வனத்துறை அதிகாரிகள் தடுப்பதற்கு முன்பே நிலைமை கைமீறி சென்றுவிட்டது. இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அதனை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜியோவுக்கு அட்டாக் வரவைக்கும் ஏர்டெல் ஹாட் ஸ்பாட் ஆஃபர்!