Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெற்றி பெறவே முடியாது: பாஜகவுக்கு சவால்விட்ட பிரசாந்த் கிஷோர்!

Advertiesment
வெற்றி பெறவே முடியாது: பாஜகவுக்கு சவால்விட்ட பிரசாந்த் கிஷோர்!
, திங்கள், 21 டிசம்பர் 2020 (14:51 IST)
அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை கூறி வரும் நிறுவனத்தை நடத்தி வரும் பிரசாந்த் கிஷோர் திடீரென பாஜகவுக்கு எதிராக சவால் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பாஜக உள்பட பல கட்சிகளுக்கு அரசியல் ஆலோசனை கூறிய நிறுவனத்தை நடத்தி வருபவர் பிரசநத் கிஷோர் என்பது தெரிந்ததே. கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு ஒரு கட்சி ஜெயிப்பதற்கு தேவையான ஐடியாக்களை கொடுக்கும் நிறுவனத்தை தான் இவர் வைத்துள்ளார். சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்கியது இந்த நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போது தமிழகத்தில் திமுகவுக்கு இந்த நிறுவனம் வேலை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியை பிடிப்போம் என பாஜகவினர் சூளுரைத்து வரும் நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்றும் வெற்றி பெறுவது மட்டுமல்ல இரட்டை இலக்கத்தில் கூட அவர்கள் தொகுதிகளை பெற முடியாது என்றும் பிரசாந்த் கிஷோர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்
 
ஒருவேளை பாஜக இரட்டை இலக்க தொகுதிகளில் வென்று விட்டால் நான் டுவிட்டரில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்றும் பிரசாந்த் கிஷோர் சவால் விட்டுள்ளார். பிரசாந்த் கிஷோரின் இந்த ஓபன் சவால் பாஜக மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இங்கிலாந்து விமானங்களுக்கு தடை: டெல்லி முதல்வர் கோரிக்கை!