ஆபாச வீடியோ விவகார வழக்கில் பெங்களூரு திரும்பிய பிரஜ்வால் ரேவண்ணா, விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பிரஜ்வால் ரேவண்ணா மே 31ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராவேன் என வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் நேற்று அவர் பெங்களூரு வந்தடைந்தார். ஜெர்மனியின் முனிச் நகரில் தங்கியிருந்த ரேவண்ணா லுஃப்தான்ஸா விமானம் மூலம் பெங்களூரு கெம்ப கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த நிலையில் நீதிமன்றம் அளித்த கைது வாரண்டை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாரிடம் எஸ் ஐ டி அதிகாரிகள் வழங்கினர்.
அதன்பின் இமிகிரேஷன் சோதனைக்கு பின் பிரஜ்வால் ரேவண்ணா கைது செய்யப்பட்டு, எஸ்ஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கர்நாடகாவில் பாலியல் புகாரில் சிக்கி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஜாமினில் வெளியே வரமுடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு தணிக்கை குழு வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் பாலியல் வீடியோ விவகாரம் வெளியானவுடன் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி தப்பி சென்றுவிட்டார் என்றும் கூறப்பட்டது.