Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போலீஸார் டார்ச்சல்...ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை !

Advertiesment
போலீஸார் டார்ச்சல்...ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை !
, திங்கள், 9 நவம்பர் 2020 (21:45 IST)
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் போலீஸார் தொந்தரவால் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்வதாக அவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் வசித்து வருபவர் ஷேக் அப்துல் சலாம்.இவரது மனைவி நூர்ஜகான்.இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்துள்ளார்.  இவர்களுக்கு இரு குழந்தைகள் இருந்துள்ளனர்.

இந்நிலையில், ஷேக் அப்துல்லா ஒரு நகைக்கடையில் வேலை பார்த்துவந்துள்ளார். அக்கடையில் சில மாதங்களுக்கு முன் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. அத்திருட்டுக்கும் இவருக்கும் தொடர்புள்ளதாக அக்கடையின் ஓனரும், போலீஸாரும் அவருக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் ஷேக் அப்துல் தான் எதுவும் செய்யவில்லை என்று கூறியும் அவரை தொடர்ந்து டார்ச்சல் செய்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் தொல்லை தாங்க முடியாமல் ஷேக்கின் குடும்பத்தினர் கடந்த 4 ஆம் தேதி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஷேக் அகமது பேசிய வீடியோ தற்போது பரவலாகி வருகிறது.இந்த வீடியோவ முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று 2257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !! 18 பேர் பலி