Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் அணிந்து ஹோலி கொண்டாடுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (08:32 IST)
வட மாநிலங்களில் இன்று முதல் மூன்று நாட்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் அனைவரும் மாஸ்க் அணிந்து ஹோலி பண்டிகையை கொண்டாடுங்கள் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்
 
இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் குறிப்பாக மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது இதனை அடுத்து பல விஐபிகள் இந்த ஆண்டு ஹோலி பண்டிகையை கொண்டாட வில்லை என அறிவித்தனர் 
 
இருப்பினும் பொதுமக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடுவது தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஹோலி பண்டிகையை கொண்டாடும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து கொண்டாடுங்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
பிரதமரின் சொந்த தொகுதியான வாரணாசியில் இன்று மிகச் சிறப்பாக ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. வாரணாசியில் உள்ள கங்கை ஆற்றங்கரையில் மக்கள் ஹோலி பண்டிகையை இன்று கொண்டாடி மகிழ்ந்தனர். ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை முகத்திலும் உடலிலும் பூசி மகிழ்ந்தனர். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று பலர் முகக்கவசம் அணிந்தே ஹோலியை கொண்டாடி வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments