Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் பார்க்க விரும்பிய தமிழ்ப் படம்… குஷியில் இயக்குனர்!

விஜய் பார்க்க விரும்பிய தமிழ்ப் படம்… குஷியில் இயக்குனர்!
, வெள்ளி, 26 மார்ச் 2021 (08:10 IST)
சமீபத்தில் ரிலிஸான தேன் திரைப்படத்தை நடிகர் விஜய் பார்க்க விரும்பியுள்ளாராம்.

இந்தியன் பனோரமாவுக்கு இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் இருந்து அசுரன் மற்றும் தேன் ஆகிய இரு படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அசுரன் படத்தைப் பற்றி எல்லா தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் தெரியும். ஆனால் இந்த தேன் என்ற படம் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி சமீபத்தில் நடைபெற்றுள்ளது. படத்தின் தரத்தின் மேல் உள்ள நம்பிக்கையால் ரிலீஸ் தேதி அறிவிக்கும் முன்னரே தைரியமாக பத்திரிக்கையாளர் காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்ற தேன் திரைப்படம் திரையரங்குகளில் சில நாட்களுக்கு முன்னர் ரிலீஸானது. திரையரங்குகளில் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் அந்த படத்தின் இயக்குனருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.

இந்த படத்தைப் பற்றி கேள்விப்பட்ட நடிகர் விஜய் அதை பார்க்க விரும்பியுள்ளாராம். அதனால் விரைவில் படக்குழுவினர் விஜய்க்கு படத்தைக் காட்ட உள்ளனராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்கள் தேர்வில் அவர் தேர்ச்சிபெறவில்லை - நடிகர் கமல்ஹாசன்