இந்த சமயத்துலதான் நாம ரொம்பா ஜாக்கிரதையா இருக்கணும்! – பிரதமர் மோடி!

Webdunia
ஞாயிறு, 31 மே 2020 (14:51 IST)
ஊரடங்கில் மெல்ல தளர்வுகள் அளித்து வரும் நிலையில் மக்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு செயல்பட வேண்டும் என பிரதர் மோடி கெட்டுக்கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் இரண்டு லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கை மாநில அரசுகளே பாதிப்பின் தீவிரம் உணர்ந்து மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் இன்று மன்கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசினார்.

அப்போது அவர் “கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒற்றுமையோடு போராடி வருகின்றனர். தற்போது தளர்வுகள் மெல்ல மெல்ல அளித்து வரும் நிலையில் மக்கள் இந்த சமயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மக்களின் ஒத்துழைப்பே கொரோனாவை எதிர்த்து இந்தியா வெற்றி பெற காரணம். இந்தியா எப்படி இதை சாதித்தது என உலக நாடுகள் உற்று நோக்குகின்றன.” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் கொரோனாவுக்கு பிறகு உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவது, வெட்டுக்கிளி தாக்கத்திலிருந்து விவசாயிகளை காக்க தேவையான நடவடிக்கைகள் குறித்தும் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 550 இண்டிகோ விமானங்கள் ரத்து.. மன்னிப்பு கேட்டு அறிக்கை..!

டிட்வா புயல் கரையை கடந்த பின்னரும் மீண்டும் மழை.. சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. !

பான் மசாலா பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசின் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments