Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள்: கோலிக்கு எத்தனையாவது இடம்?

அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள்: கோலிக்கு எத்தனையாவது இடம்?
, ஞாயிறு, 31 மே 2020 (10:56 IST)
உலகம் முழுவதும் அதிகம் சம்பாதிக்கும் முதல் 100 வீரர்களின் பட்டியலில் விராட் கோலியும் இடம் பெற்றுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த ஆங்கில பத்திரிக்கையான “போர்ப்ஸ்” ஆண்டுதோறும் உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது 2019 ஜூன் மாதம் முதல் ஜூன் 2020 வரை அதிகம் சம்பாதித்துள்ள வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

அதிகம் சம்பாதித்தவர்களில் முதலிடத்தில் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் உள்ளார். பரிசுத்தொகை, சம்பளம், விளம்பரங்களில் நடித்த சம்பளம் என அனைத்தும் சேர்த்து ஒரு வருடத்தில் ரோஜர் பெடரர் ஈட்டிய தொகை 802 கோடியாகும். இதில் விளம்பர ஒப்பந்த தொகை மட்டுமே 792 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தில் போர்ச்சுக்கல் கால்பந்து வீரரான கிறிஸ்டியன் ரொனால்டோ உள்ளார். இவர் ஓராண்டில் சம்பாதித்த தொகை 792 கோடியாகும். அர்ஜெண்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 784 கோடி ஈட்டி இரண்டாவது இடத்திலும், பிரேசில் வீரர் நெய்மார் 720 கோடியுடன் நான்காவது இடத்திலும் உள்ளார். பெரும்பாலும் கால்பந்து மற்றும் டென்னிஸ் வீரர்களே முதன்மை இடங்களை பிடித்துள்ளனர்.

இந்த முழு பட்டியலிலும் கிரிக்கெட்டிலிருந்து ஒரே ஒரு வீரர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆவார். 196 கோடி வருமானம் ஈட்டி 66வது இடத்தில் உள்ளார் விராட் கோலி. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் விராட் கோலி 100வது இடத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரோஹித் சர்மா மிக உயரிய விருதுக்குப் பரிந்துரை....