அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய இறக்குமதிகள் மீது அதிக வரி விதிப்பதாக மிரட்டி வரும் நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து தொடர்ந்து வெளியேறி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, இன்று இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
இருப்பினும், இந்த இரட்டை அழுத்தங்கள் இருந்தபோதிலும், பங்குச்சந்தையில் பெரிய அளவில் சரிவு ஏற்படாமல் இருப்பது முதலீட்டாளர்களுக்கு ஓரளவுக்கு ஆறுதலை அளிப்பதாகப் பார்க்கப்படுகிறது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ், இன்று 185 புள்ளிகள் சரிந்து, 80,355 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி, 44புள்ளிகள் சரிந்து, 24,521 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய வர்த்தகத்தில், சிப்லா, ஹீரோ மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, ஐ.டி.சி., நெஸ்லே இந்தியா, சன் பார்மா, டெக் மகேந்திரா, டைட்டன், ட்ரெண்ட் உள்ளிட்ட சில நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
அதே நேரத்தில், டி.சி.எஸ்., டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஸ்டேட் வங்கி, மாருதி, கோடக் மகேந்திரா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், பார்தி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்து வருகின்றன.