Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதமர் மோடிக்கு மேஜிக்லாம் தெரியுமா? குழந்தைகளுக்கு வித்தை காட்டிய வீடியோ வைரல்!

PM Modi Magic
, வியாழன், 16 நவம்பர் 2023 (13:57 IST)
பிரதமர் நரேந்திர மோடி குழந்தைகளியம் காயினை வைத்து செய்து காட்டிய மேஜிக் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.



தொடர்ந்து 10 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக உள்ள நரேந்திர மோடி அவ்வபோது குழந்தைகளை பல்வேறு இடங்களில் சந்திப்பதும், பேசுவதும் வழக்கமாக உள்ளது. சமீபத்தில் பள்ளி மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வுகளை பயமின்றி எதிர்கொள்வதற்காக மாணவர்களுக்காக ஒரு புத்தகமே எழுதி இருந்தார் நரேந்திரமோடி. இது தமிழ் உள்பட பல இந்திய மொழிகளிலும் வெளியானது.

தற்போது பிரதமர் மோடியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. அதில் அவரை சந்திக்க வந்த இரண்டு குழந்தைகளிடம் அவர் சில விளையாட்டுகளை செய்து காட்டுகிறார்.

முதலில் இரு குழந்தைகளின் காதை பிடித்து தலையை முட்டி விளையாடிய அவர், பின்னர் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து நெற்றியில் வைத்து பின்னால் தலையில் அடித்து வித்தை செய்து காட்டுகிறார். குழந்தைகளோடு குழந்தையாக மாறி அவர் செய்யும் இந்த வித்தைகளை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மழை பெய்தால் உடனே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடாது: கலெக்டர்களுக்கு கட்டுப்பாடுகள்..!