கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி தான் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் திடீரென தோன்றி பண மதிப்பிழப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அவர் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக கருப்பு பணம் வெளியே வந்ததாகவும் இதே போன்று இன்னும் ஒரு முறை செய்ய வேண்டும் என்றும் பாஜகவினர் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி கட்டு கட்டாக பாகிஸ்தானில் அச்சடித்து வைக்கப்பட்டிருந்த கள்ள நோட்டுகள் செல்லாக்காசு ஆகிவிட்டதால் பாகிஸ்தான் பெரும் பின்னடைவை சந்தித்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால் அதே நேரத்தில் பொது மக்களுக்கு சில அசெளகரியங்கள் இருந்தது உண்மைதான். பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது பிரதமர் மோடியின் துணிச்சலான நடவடிக்கை என்று ஒரு பக்கம் பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும் ஏழை எளிய மக்கள் சில நாட்கள் பெரும் அவதியில் இருந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்ட்ஸ் பகுதியில் தெரிவிக்கவும்