Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 9 April 2025
webdunia

மழை பெய்தால் உடனே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடாது: கலெக்டர்களுக்கு கட்டுப்பாடுகள்..!

Advertiesment
மழை
, வியாழன், 16 நவம்பர் 2023 (13:16 IST)
சின்ன மழை பெய்தாலே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்து வரும் நிலையில்  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க சில கட்டுப்பாடுகளை கல்வி  முதன்மை கல்வி விதித்துள்ளார். அவை பின் வருமாறு
 
1. தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றாலோ, போக்குவரத்து பாதிக்கப்பட்டோலோ மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். மிதமான மழைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கூடாது.
 
2. மழை நிலவரத்தை ஆராய்ந்து 3 மணி நேரத்திற்கு முன்பாகவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
 
3. முதன்மை கல்வி அலுவலர்கள் மழையின் தீவிரத்தை ஆராய்ந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
 
4. மழையின் தீவிரத்தை உணர்ந்து அதிகம் பாதிக்க கூடிய குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்க வேண்டும். மாவட்டம் முழுவதற்கும் விடுமுறை அளிப்பதை தவிர்க்க வேண்டும்.
 
5. கோயில் திருவிழாக்களின் போது அளிக்கப்படும் விடுமுறையை வேறொரு நாளில் பள்ளி வைத்து ஈடு செய்ய வேண்டும்.
 
6. மழை காரணமாக அளிக்கப்படும் விடுமுறைகளை சனிக்கிழமைகளில் பள்ளி வைத்து ஈடு செய்ய வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் கற்க முடியும்.
 
7. மழையால் பாதிக்கப்பட்டு பள்ளிகளில் மழைநீர் தேங்கியிருந்தால், உடனடியாக மழைநீர் வெளியேற்றப்பட்டு போதுமான வசதிகள் செய்து தரப்படும்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக கொடி சின்னம்: ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கில் முக்கிய உத்தரவு..!