நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.75 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உள்பட கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதனை அடுத்து மத்திய அரசின் சார்பில் அதிரடி கட்டுப்பாடுகள் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இன்று 11:30 மணிக்கு பிரதமர் மோடி சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு அல்லது முழு ஊரடங்கு இருக்காது என்றே மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன
ஏற்கனவே முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் பிரதமர் மோடிக்கு ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார் என்பதும் அதுகுறித்தும் இந்த அவசர ஆலோசனையில் பரிசீலிக்கப்படும் என்றும் படுகிறது.