Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதமரை பதவி விலக சொல்லி டிராமா பண்ணாதீங்க! – திருமா மீது அண்ணாமலை சீற்றம்!

Advertiesment
பிரதமரை பதவி விலக சொல்லி டிராமா பண்ணாதீங்க! – திருமா மீது அண்ணாமலை சீற்றம்!
, திங்கள், 19 ஏப்ரல் 2021 (11:15 IST)
கொரோனா பரவலை தடுக்க தவறிய பிரதமர் பதவி விலக வேண்டும் என திருமாவளவன் அறிக்கை வெளியிட்டதற்கு பாஜக வேட்பாளர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் கடந்த ஆண்டை விட வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இந்த முறை தேசிய அளவிலான ஊரடங்கு அறிவிக்கப்படாமல் மாநிலங்களே ஊரடங்கு குறித்து முடிவெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் பிரதமர் மோடி கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்க தவறி விட்டதாகவும், கொரோனா உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் திருமாவளவனின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக அரவக்குறிச்சி வேட்பாளர் அண்ணாமலை “திரு. திருமாவளவன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்த முதலில் நீங்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள். அரசியலோடு உங்களை தொடர்பில் வைத்திருக்க இதுபோன்ற அர்த்தமற்ற நாடகங்களை நடத்துகிறீர்கள்” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! சூப்பர்ஹீரோ போல வந்த ரயில்வே ஊழியர்! – திகைக்க செய்யும் வீடியோ!