பீகார் சட்டமன்ற தேர்தல்: என்.டி.ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? பிரதமர் மோடி அறிவிப்பு..!

Mahendran
சனி, 25 அக்டோபர் 2025 (11:12 IST)
பீகாரில் 243 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமார் தான் என்பதை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளிப்படையாக உறுதிப்படுத்தினார்.
 
 சமஸ்திபூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர், என்டிஏ ஒற்றுமையாக இருப்பதாகவும், பீகாரை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்ல பாடுபடுவதாகவும் கூறினார்.
 
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ. மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி 29 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
 
எதிர்க்கட்சிகளின் 'மஹாகட்பந்தன்' கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். இக்கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 143 தொகுதிகளிலும், காங்கிரஸ் 60 தொகுதிகளிலும் களம் காண்கின்றன.
 
மஹாகட்பந்தன் கூட்டணியை விமர்சித்த பிரதமர் மோடி, அக்கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்றும், மக்கள் மீது அக்கறை இல்லாத அக்கட்சி 'கொள்ளையடிக்க' மட்டுமே யோசிப்பதாகவும் சாடினார். 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments