Publish Date: Thu, 18 Mar 2021 (07:57 IST)
Updated Date: Thu, 18 Mar 2021 (08:07 IST)
கேரள முதல்வர் பினராயி விஜயனின் சொத்து மதிப்பு ரூபாய் 54 லட்சம் என வேட்புமனுத் தாக்கலில் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி 140 தொகுதிகளுக்கும் தேர்தல் ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இந்த தேர்தலில் முதல்வர் பினராயி விஜயன் தர்மாதம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் வேட்புமனுத்தாக்கலில் தனது சொத்து மதிப்புகள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளார். அதில் 51.95 லட்சம் ரூபாய்க்கு அசையா சொத்து உள்ளதாகவும், 2.05 லட்சம் ரூபாய்க்கு அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும், வங்கிக் கணக்கில் 78 ஆயிரம் ரூபாய் உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.