பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழி உண்டு. ஆனால் அதே பாம்புதான் மக்களால் கடவுளாகவும் வணங்கப்படுகிறது. அதனால் இந்தப் பாம்புகள் உலகில் ஆச்சர்யம் நிரம்பியவை. இந்நிலையில்,மேற்கு வங்காள மாநிலத்தில் மிட்னாபூர் நகரில் மக்கள் வசிப்பிடத்தில் இருதலைப்பாம்பு புகுந்தது.
இதை நல்ல பாம்பு என்றி நினைத்த மக்கள் அதை தம்மிடம் வைத்துக்கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாம்பை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால், இரட்டை தலை உடைய பாம்பு புராண நம்பிக்கை உடையது என அம்மக்கள் பாம்பை தர மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியதாவது : இரட்டை தலை பாம்பு, புராண நம்பிக்கையுடன் தொடர்புடையது இல்லை என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.