Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷூவுக்குள் இருந்த பாம்பு கடித்த பெண் – அருகில் மருத்துவமனை இருந்தும் காப்பாற்ற முடியாத அவலம் !

Advertiesment
ஷூவுக்குள் இருந்த பாம்பு கடித்த பெண் – அருகில் மருத்துவமனை இருந்தும் காப்பாற்ற முடியாத அவலம் !
, வெள்ளி, 6 டிசம்பர் 2019 (08:37 IST)
சென்னை கே கே நகரில் வீட்டிலுள்ள பழைய ஷூவுக்குள் இருந்த பாம்பு கடித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

சென்னை கே கே நகரை அடுத்துள்ள கன்னிகாபுரம் 3 ஆவது தெருவில் பழனி மற்றும் சுமித்ரா ஆகிய தம்பதிகள் வசித்து வருகின்றனர். சுமித்ரா நேற்று முன் தினம் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த போது வெகு நாட்களாக பயன்படுத்தாமல் இருந்த ஷூ ஒன்றை எடுத்து சுத்தம் செய்துள்ளார். அப்போது  அதனுள் இருந்த பாம்பு ஒன்று அவரைக் கடித்துள்ளது.

இதையடுத்து கே கே நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அவர். ஆனால் அங்கு விஷமுறிவு மருந்துகள் இல்லாததால் ஸ்டான்லி மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்துள்ளனர். அங்கு அழைத்துச் செல்வதற்குள் விஷம் அவரது உடல் முழுவதும் பரவியுள்ளது.

இதனால் நரம்பு மண்டலம் செயலிழந்ததால் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். ஒருவேளை கே கே நகர் அரசு மருத்துவமனையில் பாம்புக்கடிக்கான விஷமருந்து இருந்து அங்கே சேர்த்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவியைக் கொல்ல விஷப்பாம்பு… உறவினர்கள் நாடகம் – கொலைகார கணவன் சிக்கியது எப்படி ?