இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளதால், இந்தியாவிற்கு சிகிச்சைக்காக வந்த பல பாகிஸ்தானியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சை காரணமாக அதிக நபர்கள் வந்து கொண்டிருக்கின்றனர் என்பதும், சென்னையில் கூட பாகிஸ்தானியர்களுக்கு சில அறுவை சிகிச்சைகள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கூட, ஏராளமான பாகிஸ்தானிய பொதுமக்கள் இந்தியாவுக்கு சிகிச்சைக்காக நாடு முழுவதிலும் உள்ள பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவுக்கு சட்டபூர்வமாக வந்திருந்தால் கூட, பாகிஸ்தானியர்கள் இன்னும் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவு சிகிச்சைக்காக வந்த பாகிஸ்தானியர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ சிகிச்சை இன்னும் முடியாத நிலையில் பலர் இருக்கும் நிலையில், எப்படி தங்கள் நாட்டிற்கு போக முடியும் என்று அவர்கள் சிக்கலில் உள்ளதாக கூறப்படுகிறது.