Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வான்வழியை மூடிய பாகிஸ்தான்: பயணிகளுக்கு இண்டிகோ, ஏர் இந்தியா முக்கிய அறிவிப்பு..!

Siva
வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (13:26 IST)
இந்திய விமானங்களுக்கான வான்வழியை பாகிஸ்தான் மூடியதால் விமானங்கள் தாமதமாக கிளம்பலாம் என்றும் அதேபோல் இந்தியாவுக்கு வரும் விமானங்களும் தாமதமாக வர வாய்ப்பு இருப்பதாகவும் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் தங்கள் பயணிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளது.
 
வான்வழி மூடப்பட்டதால் சில நூறு கிலோ மீட்டர்கள் சுற்றிவர வேண்டிய நிலை இருப்பதால் எரிபொருள் அதிகமாகும் என்றும் அதனால் கட்டணங்கள் உயரும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
இது குறித்து ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
 
ஏர் இந்தியா: அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, இங்கிலாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் மாற்று பாதையில் வரும். இந்த தவிர்க்க முடியாத சூழ்நிலைக்காக பயணிகளிடம் வருத்தம் தெரிவிக்கிறோம்;
 
இண்டிகோ: பாகிஸ்தானின் அறிவிப்பால் எங்களது விமானங்கள் தாமதமாக வந்து சேரும். விமான பயணத்தின் தற்போதைய நிலையை மீண்டும் சரிபார்க்கவும். உங்கள் விமானம் பாதிக்கப்பட்டு இருந்தால், மாற்று வழியை பரிசீலனை செய்யலாம் அல்லது இணையதளம் மூலம் கட்டணத்தை திரும்ப பெறலாம்’
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'முட்டாப்பயலே, ராஸ்கல்.. மேடையில் ஒருவரை ஒருவர் திட்டி கொண்ட திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பி..!

6 மாதத்தில் 5 போர்களை நிறுத்தினேன்.. தனக்கு தானே பெருமை பேசிக்கொண்ட டிரம்ப்..!

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

நலம் காக்கும் ஸ்டாலினுக்கு நன்றி! சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோ வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments