பெஹல்காம் தாக்குதல் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக, பங்குச்சந்தை நேற்றும் இன்றும் இறங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியதும் சரிந்து வருவதாகவும், சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 195 புள்ளிகள் குறைந்து 79,595 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 66 புள்ளிகள் குறைந்து 24,152 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் பாரதி ஏர்டெல், ஹெச்சிஎல் டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், மாருதி, டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
அதேபோல், டைட்டன், டாட்டா ஸ்டீல், டாட்டா மோட்டார்ஸ், சன் பார்மா, ஸ்டேட் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, ஐடிசி, இண்டஸ் இன்ட் வங்கி, ஹீரோ மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.