காஷ்மீர் எல்லையில் உள்ள பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுத்த இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை தாக்கி அழித்தது. தாங்கள் பாகிஸ்தான் மக்களையோ, ராணுவத்தையோ குறிவைக்கவில்லை என இந்தியா விளக்கம் அளித்திருந்தது.
ஆனால் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் நேற்று காஷ்மீர் எல்லையில் உள்ள பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் உட்பட பொதுமக்கள் சிலரும் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனால் பாகிஸ்தான் ராணுவத்துடனான நேரடி மோதலுக்கு இந்திய ராணுவம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் ஏவுகணைகள தாக்கி அழிக்கும் அமைப்புகள், விமானங்களை சுட்டு வீழ்த்தும் வான் பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அரபிக்கடலில் இந்திய ராணுவக் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தின் முப்படைகளும் தயார் நிலையில் உள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edit by Prasanth.K