இன்று நாடு முழுவதும் "போர் ஒத்திகை" என இந்திய அரசு அறிவித்து, பாகிஸ்தானை ஏமாற்றி, திடீரென நள்ளிரவில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ள அசத்தல் திட்டம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பொதுவாக போர் ஒத்திகை நடத்தப்பட்டால், அதன் பின் இரண்டு மூன்று நாட்கள் கழித்தே போர் தொடங்கும். அதேபோல் இன்று நாடு முழுவதும் இந்தியா போர் ஒத்திகையை நடத்துகிறது என்று, அதன் பிறகு சில நாட்கள் கழித்து தான் போரை இந்தியா தொடங்கும் என்றும் பாகிஸ்தான் நம்பியிருந்தது.
ஆனால் பாகிஸ்தானை மிகவும் சாதுரியமாக ஏமாற்றி, இரவோடு இரவாக பக்கா பிளான் செய்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலை எதிர்பாராத பாகிஸ்தான் தற்போது நிலை குலைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போர்க்கால ஒத்திகை என்ற நாடகம் பிரதமர் மற்றும் முப்படை தளபதிக்கு மட்டுமே தெரியும் என்றும், மாநில அரசுகளுக்கு கூட இதை தெரிவிக்கப்படவில்லை என்றும், ரகசியமாக வைத்திருந்து அதிரடியாக நள்ளிரவில் தாக்குதல் நடத்தி இந்தியா ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.