”இந்தியாவின் ஆன்மாவை பாதுகாத்ததற்கு நன்றி”.. பிரஷாந்த் கிஷோர் டிவிட்

Arun Prasath

செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (12:32 IST)
பிரஷாந்த் கிஷோர்

இந்தியாவின் ஆன்மாவை பாதுகாத்த டெல்லி மக்களுக்கு நன்றி என பிரஷாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்துள்ளார்.

டெல்லியில் கடந்த வாரம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 70 தொகுதிகளில் 57 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் அரசியல் கட்சிகளுக்கு பரப்புரை உத்திகளை வகுத்து தரும் பிரஷாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பக்கத்தில் “இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றிய டெல்லி மக்களுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார். டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரஷாந்த் கிஷோர் பரப்புரை உத்திகளை வகுத்து தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thank you Delhi for standing up to protect the soul of India!

— Prashant Kishor (@PrashantKishor) February 11, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ரஜினியோட கூட்டணி வைக்கலாம்னு பாக்குறேன்! – பரபரப்பு கிளப்பும் ராமதாஸ்