பணமதிப்பிழப்பு விவகாரம் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியான நிலையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அந்த தீர்ப்பிற்கு முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த வழக்கின் தீர்ப்பை 5 நீதிபதிகள் வழங்கிய நிலையில் நான்கு நீதிபதிகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என தீர்ப்பளித்தனர்
ஆனால் நாகரத்னா என்ற நீதிபதி மட்டும் இது சட்டவிரோத நடவடிக்கை என்று தீர்ப்பளித்தார். அவருடைய இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் தனது சமூக வலைத்தளத்தில் பணமதிப்பிழப்பு விவகாரத்தில் சட்ட விரோதம் என மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றிலேயே இந்த மாறுபட்ட தீர்ப்பு புகழ்பெற்ற தீர்ப்பாக மாறி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தில் நாடாளுமன்றத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அந்த நீதிபதியின் தீர்ப்பு வலியுறுத்தியுள்ளது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.