Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

demonetization
, திங்கள், 2 ஜனவரி 2023 (11:30 IST)
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதியை இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சற்றுமுன் தீர்ப்பு வெளியாகி உள்ளது.
 
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தது. இதனை அடுத்து அன்றைய நிலையில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. 
 
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மனு மீதான விசாரணை கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு சற்றுமுன் வெளியிட்டுவிட்டனர்.
 
நாட்டில் வரி ஏய்ப்பை தடுக்கவும் பல்வேறு முக்கிய காரணங்களுக்காகவும் தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர். இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈஷாவில் யோகா பயிற்சிக்கு சென்றபோது மாயமான பெண் சடலமாக மீட்பு – குடும்பத்தினர் சந்தேகம்