Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லேண்டர் விக்ரம் சேப்டர் எண்ட்ஸ்: நாளையோடு முடியும் ஆயுட்காலம்!

லேண்டர் விக்ரம் சேப்டர் எண்ட்ஸ்: நாளையோடு முடியும் ஆயுட்காலம்!
, வியாழன், 19 செப்டம்பர் 2019 (12:25 IST)
நிலவை ஆய்வுசெய்ய சென்று தகவல் தொடர்பு துண்டான விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் நாளையுடன் முடிகிறது. 
 
இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலைவின் மேற்பகுதியில் தரையிறங்கும் போது தகவல் தொடர்பை இழந்தது. அதன் பின்னர், எந்த சேதமும் இன்றி சாய்ந்த நிலையில் லேண்டர் விக்ரம் நிலவின் மேற்பகுதியில் உள்ளதாக ஆர்பிட்டர் தகவல் கொடுத்தது.  
 
இந்நிலையில் அதை தொடர்ந்து தகவல் தொடர்ப்பை மீண்டும் பெற பல முயற்சிகள் மேற்கொண்டும் பலனலிக்கவில்லை. எனவே இஸ்ரோ, விக்ரம் லேண்டரை படம் பிடிக்க, தொடர்புகொள்ள நாசாவின் உதவியை நாடியிருந்தது. நாசாவும் உதவ முன்வந்தது. 
webdunia
ஆனால், நிலவுக்கு இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை நாசாவாலும் படம் பிடிக்க முடியவில்லை. சமிக்ஞை மூலமாகவும் லேண்டர் விக்ரமை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் நாளையுடன் முடிகிறது என தெரிகிறது. நிலவில் தரையிறங்கி 14 நாட்களுக்கு மட்டுமே ஆக்டிவாக இருக்கும். அந்த 14 நாட்கள் நாளையோடு முடிவதால் லேண்டர் விக்ரமை நிரந்தமாக இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விபத்து…சென்னையில் பரபரப்பு