திமுகவின் கோரிக்கை காரணமாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய அணியை உருவாக்க எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஜூன் 12ஆம் தேதி நடைபெற இருந்தது.
இந்த நிலையில் திமுக உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்தின் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது.
இதனை அடுத்து திமுக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கையை ஏற்று ஜூன் 12-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 23ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் இந்த கூட்டம் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.