ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவு முழுவதுமாக ஏற்றுக் கொள்வதாக அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து மிகப்பெரிய உயிர் சேதத்தை ஏற்படுத்தியது என்பதும் இந்த விபத்தில் 275 பேர் உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை முழுவதுமாக ஏற்பதாக கௌதம் அதானி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் அதானி குழுமம் ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது என்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதும் அவர்களது குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை அளிப்பதும் நம் அனைவரும் கடமை என்றும் தெரிவித்துள்ளார்.