ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி ஆகிய நிறுவனங்கள் இனி இந்தியாவில் டிவி விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளன. இரு நிறுவனங்களும் தங்களது இந்த முடிவுக்கு குறிப்பிட்ட காரணத்தை தெரிவிக்கவில்லை என்றாலும், இந்திய தொலைக்காட்சி சந்தையில் அதிகரித்து வரும் போட்டி காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி ஆகிய நிறுவனங்கள் கடந்த 2019 மற்றும் 2020 இல் இந்திய தொலைக்காட்சி சந்தையில் நுழைந்தன. ஆனால் அவர்களால் இந்திய வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற முடியவில்லை. இந்திய தொலைக்காட்சி சந்தையில் Samsung, LG மற்றும் Sony போன்ற பிராண்டுகள் ஆதிக்கம் செலுத்துவதால் எதிர்பார்த்த விற்பனை ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி ஆகிய நிறுவனங்களுக்கு இல்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி ஆகிய நிறுவனங்கள் இந்திய டிவி சந்தையில் இருந்து வெளியேறுவதால், நுகர்வோருக்கு இனி இந்நிறுவனங்களின் டிவிக்கள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது,