Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதுச்சேரியில் மின்துறை தொழிலாளர்கள் அலுவலகம் முற்றுகை..! ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு..

pondy protest

Senthil Velan

, செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (17:44 IST)
பாராளுமன்றத் தேர்தலில் தேதி அறிவிக்கப்படும் முன்பு புதுச்சேரி மின்துறையில் ALI பதவிகளை காலம் கடத்தல் வழங்கிட வேண்டும், பணி நிரந்தர ஆணை வழங்க வேண்டும் என கோரி மின்துறை ஐடிஐ நலச்சங்க ஊழியர்கள், துறை தலைவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
பாராளுமன்றத் தேர்தலில் தேதி அறிவிக்கப்படும் முன்பு ALI பதவிகளை காலம் கடத்தல் வழங்கிட வேண்டும், ஒயர்மேன், ஃபோர்மேன் பதவி உயர்வை ரெகுலர் செய்திட வேண்டும், கன்ஸ்ட்ரக்ஷன் ஹெல்பர் முதல் ஒயர்மேன் வரை உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் பணி நிரந்தர அணையை வழங்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மின்துறை ஐடிஐ நலச் சங்கத்தின் சார்பில் மின்துறை தொழிலாளர்கள் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
 
பின்னர் துறைத் தலைவர் அலுவலகம் முன்பு  தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் தலைவர் அருள்மொழி மற்றும் பொதுச் செயலாளர் ரவி ஆகியோர் தலைமை தாங்கினார்.


இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டங்களை முன் எடுப்போம் என எச்சரிக்கை விடுத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆருத்ரா கோல்டு மோசடி.. கைதான ரூசோவுக்கு ஜாமின் ரத்து.. உடனடியாக சரணடைய உத்தரவு..!