Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாதந்தோறும் ₹90,000 ஜீவனாம்சம்: வருமானத்தை மறைத்த கணவனுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Advertiesment
ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம்

Siva

, புதன், 2 ஜூலை 2025 (08:21 IST)
விவாகரத்து பெற்ற ஒரு கணவர் தனது முன்னாள் மனைவிக்கு ₹50,000 மற்றும் ஆட்டிசம் பாதித்த மகனுக்கு ₹40,000 என மாதந்தோறும் மொத்தம் ₹90,000 ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கணவரின் உண்மையான ஆண்டு வருமானம் ₹27 லட்சம் என்பதை ஒரு RTI தகவல் அம்பலப்படுத்தியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கு, ராஞ்சி குடும்ப நல நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை எதிர்த்து பெண் தொடுத்த வழக்கில் தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளது. குடும்ப நல நீதிமன்றம் அவருக்கு ஒரு முறை ஜீவனாம்சமாக ₹12 லட்சம் மற்றும் குழந்தையின் பராமரிப்புக்காக மாதந்தோறும் ₹8,000 வழங்க உத்தரவிட்டிருந்தது. 
 
கணவர் நீதிமன்றத்தில் தான் வேலையில்லாமல் இருப்பதாக கூறிய நிலையில், அந்த பெண்ணின் சட்டக் குழுவினர் வருமான வரித்துறையிலிருந்து பெற்ற ஒரு RTI பதிலை தாக்கல் செய்தனர். அதில், அவர் மும்பையில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், பிடித்தங்கள் போக மாதந்தோறும் ₹2.3 லட்சம் சம்பளம் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
இதையடுத்து மேற்கண்ட தீர்ப்பை அதாவது முன்னாள் மனைவிக்கு ₹50,000 மற்றும் ஆட்டிசம் பாதித்த மகனுக்கு ₹40,000 என மாதந்தோறும் மொத்தம் ₹90,000 ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிரம்ப்பின் 'அச்சுறுத்தலுக்கு' எலான் மஸ்க்-கின் மர்மமான பதில்: வெளியேற்றப்படுவாரா மஸ்க்?