Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா அபாயம்: ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு!

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (12:30 IST)
ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 14 வரை இருந்த ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு என அறிவிப்பு. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் கொரோனா பாதிப்புகளும் மெல்ல அதிகரித்து வருகின்றன.
 
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்குள் பிறப்பிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த ஊரடங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீடிக்க வேண்டும் என ஒரு சில மாநிலங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றன. 
 
குறிப்பாக உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மத்திய அரசிடம் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளன. இது மோடி அரசு விரைவில் முடிவெடுக்கும் என தெரிகிறது. 
 
இந்நிலையில் ஒடிசா அரசு ஊரடங்கை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. ஆம், கொரோனாவின் தாக்கம் குறையாததால் ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 14 வரை இருந்த ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். 

மேலும், கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஜூன் 17 வரை மூடுவதாகவும் அறிவித்துள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு குறித்து விவாதங்கள் நாடு முழுவதும் எழுந்து வரும் நிலையில் முதல் மாநிலமாக ஒடிசா ஊரடங்களை நீட்டித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசு என்னும் மதயானையின் அங்குசம்? மாநிலக் கல்விக் கொள்கை வெளியிட்டார் முதல்வர்!

பெண்களின் அந்தரங்க தகவல்களை விற்ற Meta! உடன் சிக்கிய Google?

ரோந்து பணிகளுக்கு தனியாக செல்ல வேண்டாம்: காவல்துறையினர்களுக்கு அதிகாரிகள் உத்தரவு..!

இந்தியாவுடன் பல ஆண்டுகள் கட்டமைத்த உறவு பாதிப்படைய வாய்ப்பு; டிரம்ப்பை எச்சரிக்கும் அமெரிக்க செனட்டர்

காலம் மாறும்.. அப்போ உங்களுக்கு தண்டனை நிச்சயம்! - தேர்தல் அதிகாரிகளுக்கு ராகுல் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments