Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஊரடங்கு போட்டும் இப்படி பண்றீங்களே! – கேள்விகேட்ட ரியாஸ்கான் மீது தாக்குதல்!

Advertiesment
ஊரடங்கு போட்டும் இப்படி பண்றீங்களே! – கேள்விகேட்ட ரியாஸ்கான் மீது தாக்குதல்!
, வியாழன், 9 ஏப்ரல் 2020 (10:51 IST)
ஊரடங்கின்போது கூடியவர்களை கலைந்து போக சொன்ன சினிமா நடிகர் ரியாஸ்கான் மீது தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் வின்னர், நரசிம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ரியாஸ்கான். சென்னையில் பனையூர் பகுதியில் வசித்து வரும் ரியாஸ்கான் அந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டு திரும்பியுள்ளார். அப்போது அவர் வீட்டின் அருகே சிலர் கூடி நின்று பேசிக்கொண்டிருந்திருக்கின்றனர்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கூடி பேசுவதை தவிர்க்க சொல்லி அவர்களிடம் அறிவுறுத்தியுள்ளார் ரியாஸ்கான். இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் எதிர் தரப்பினர் ரியாஸ்கானை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ரியாஸ்கான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ZOOM பண்ணி பாக்குறவங்க எல்லாரும் ஒழுங்கா கை தூக்குங்க - கொரோனா டைம் பாஸ் சாக்ஷி தான்!