ஊரடங்கு உத்தரவுகளை மாநில அரசுகள் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தால் ஊரடங்கை திரும்ப பெற இருப்பதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்க உள்ளார். இந்நிலையில் ஊரடங்கு குறித்து பேசியுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பா “மத்திய அரசு அனுமதி அளித்தால் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் ஊரடங்கை வாபஸ் பெற இருப்பதாக கூறியுள்ளார்
மேலும் “கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மாநில அரசின் அனைத்து வகையான வருவாயும் நின்று விட்டது. அதனால் பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த முடியாது. முக்கியமான சில திட்டங்கள் மட்டும் செயல்படுத்தப்படும். கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சரிசெய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.