ஆகஸ்டு 15 இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் மாநிலங்களில் பிளாஸ்டிக் கொடி பயன்பாட்டை தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”தேசியக்கொடி மீது மக்கள் அன்பும், மரியாதையும் வைத்துள்ளனர். தேசிய கொடிக்கு உரிய மரியாதை பிளாஸ்டிக் கொடிகளால் சாத்தியப்படுவது இல்லை. பிளாஸ்டிக் கொடிகள் மண்ணில் மக்குவதற்கு நாளாகும் என்பதோடு நீர்வளத்தையும் பாதிக்கும். அதனால் பிளாஸ்டிக் கொடிகள் தயாரிப்பை தவிர்த்து காகித கொடிகள் தயாரிப்பை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும்” என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.