Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாவூத் இப்ராஹிம் உள்பட 4 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்தது மத்திய அரசு

தாவூத் இப்ராஹிம் உள்பட 4 பேரை  பயங்கரவாதிகளாக அறிவித்தது  மத்திய அரசு
, புதன், 4 செப்டம்பர் 2019 (18:56 IST)
இந்தியாவில் மும்பை தொடர்குண்டுவெடிப்பு, பதன்கோட் தாக்குதல்,மும்பை தாஜ் ஹோட்டல் துப்பாக்கிச் சூடு, புல்வாமா தாக்குதல் என தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இந்தியாவை குழப்பத்தை  உண்டாக்கி மிகப்பெரும் பொருளாதார சீரழிவை உண்டாக்க வேண்டுமென பயங்கரவாதிகள் திட்டம் தீட்டிவந்துள்ளனர். இதற்குஅண்டை நாடான பாகிஸ்தான் தான் அந்த தீவிரவாதிகளுக்கு உதவிவருவதாகவும்  உலக நாடுகளிடம் குற்றம்சாட்டி வருகின்றது. 
இந்தியாவில் பல்வேறு குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக ரஹ்மான லக்வி, மசூத் அசார், தாவூத் இப்ராஹீம், சயீத் லக்கி ஆகியோரை பயங்கரவாதிகளாக மத்திய அரசு  இன்று அறிவித்துள்ளது.
 
ஏற்கனவே மும்மை தொடர்குண்டுவெடிப்பில் இந்தியாவால் தேடப்பட்டுவருபவரான தாவூத் இப்ராகிமை  தேடப்பட்டுவரும்  குற்றவாளியாக உள்ள நிலையில், ஹபீஸ் சயீத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு சர்வதேச குற்றவாளியாக  அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தில் தலைவரும் இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தாக்குதலுக்கு காரணமான  மசூத் அசார் மற்றும் ஜாக்கி ரஹ்மான் ஆகியோரை  சர்வதேச பயங்ரவாதியாக ஐநா சபை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட உபா சட்டத்தின் கீழ் ( தனிநபர் ஒருவரை  பயங்கரவாதியாக அறிவிக்கும் சட்டம் )இந்திய அரசால் தேடப்படும் ஹபீஸ் சயீத்,ஜாக்கி ரஹ்மா ,மசூத் அசார் ,  தாவூத் இப்ராஹீம் ஆகியோரை பயங்கவாதிகளாக இன்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிகப்பெரிய ஆளுமையை விமர்சிப்பதா? ரஜினிக்காக பொங்கும் எச்.ராஜா!