Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான் கொடி ஏந்திச் செல்லப்பட்டது உண்மையா?? உண்மை பின்னணி என்ன??

Advertiesment
பாகிஸ்தான் கொடி ஏந்திச் செல்லப்பட்டது உண்மையா?? உண்மை பின்னணி என்ன??
, செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (11:00 IST)
கேரளாவில் ஒரு கல்லூரி விழாவில் மாணவர்கள் சிலர் பாகிஸ்தான் கொடியை ஏந்திச் சென்றதால் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் ஏந்திச் சென்றது பாகிஸ்தான் கொடியா? என்பதன் உண்மை பின்னணி வெளியாகியுள்ளது.

கேரளா மாநிலம் பேராம்பிரா அருகிலுள்ள ஒரு கலை கல்லூரியில் மாணவர் சங்கத் தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்தது. அப்போது பாகிஸ்தான் தேசிய கொடியின் வடிவமைப்புடைய ஒரு கொடியை சில மாணவர்கள் ஏந்தி வந்தனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதில், காவல் துறையின் கவனத்திற்குச் சென்றது.

பின்பு அந்த மாணவர்களின் மீது வன்முறையை தூண்டுவதன் நோக்கத்தோடு சட்டவிரோதமாக கூடுவது போன்ற  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது அந்த கொடி பாகிஸ்தான் கொடி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் தேசிய கொடியில் மையப்பகுதியில் தான் பிறை நிலா இருக்கும், ஆனால் அந்த கொடியில் பிறை நிலா இடதுபுற ஓரத்தில் இருந்தது என தெளிவாகியுள்ளது.
webdunia

இது இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் மாணவர் பிரிவான முஸ்லீம் மாணவர் கூட்டமைப்பின் கொடி என்று கூறப்படுகிறது. பிறகு ஏன் இந்த குழப்பம் என்று கண்டறிந்தபோது, முஸ்லீம் மாணவர் கூட்டமைப்பின் கொடியை டெய்லர் தவறுதலாக பாகிஸ்தானின் கொடியை போல் தைத்ததே காரணம் என கூறப்படுகிறது. அதாவது பாகிஸ்தான் கொடியில் உள்ள வெள்ளை நிறம் அந்த கொடியின் கால் பங்கு மட்டுமே இருக்கும். ஆனால் முஸ்லீம் லீக் கூட்டமைப்பின் கொடியில் பாதி பங்கு வெள்ளை நிறமும் , பாதி பங்கு பச்சை நிறமும் இருக்கும்.

முஸ்லீம் மாணவர் கூட்டமைப்பின் கொடியை தைத்த டெய்லர், தவறுதலாக பாகிஸ்தான் கொடி போல் கால் பங்கு வெள்ளை நிறம் வருமாறு தைத்துள்ளார். இதனால் அது பாகிஸ்தான் கொடி போல் காட்சித் தந்து அந்த புகைப்படம் வைரலாக்கப்பட்டது. தற்போது இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் மீதுள்ள தவறான எண்ணம் நீங்கும் எனவும், மீண்டும் அவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரார்த்தனைக்கு கிளம்பிய போப் ஆண்டவர் லிஃப்டுக்குள் மாட்டிக்கொண்ட பரிதாபம்…