Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாய்லட் சர்ச்சை – அமேசான் மீது நொய்டா போலிஸார் வழக்குப் பதிவு !

டாய்லட் சர்ச்சை – அமேசான் மீது நொய்டா போலிஸார் வழக்குப் பதிவு !
, சனி, 18 மே 2019 (12:28 IST)
சர்ச்சைக்குரிய வகையில் இந்துக் கடவுள்களை கழிவறை உபயோகப் பொருட்களில் பயன்படுத்திய விவகாரத்தில் அமேசான் நிறுவனம் மீது நொய்டா போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உலகின் நம்பர் 1 ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமாக அமேசான் கொடிக் கட்டிப் பறக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமாக இருந்தாலும் இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் வலுவான மார்க்கெட்டைக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அமேசான் ஒரு புது சிக்கலில் சிக்கியுள்ளது. 

சில நாட்களுக்கு முன்னர் கழிவறைகளில் பயன்படுத்தப்படும் கவர்கள், காலணிகள், வாசலில் பயன்படுத்தப்படும் மேட் உள்ளிட்ட பொருட்களில் பிள்ளையார் படங்கள் பொறிக்கப்பட்டு அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த மக்கள் இந்தியாவில் அமேசான் பொருட்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என #Boycottamazon என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கினர். கடந்த 2017 ஆம் ஆண்டு கனடா நாட்டிற்கான அமேசான் இணையதளத்தில் இந்திய கொடி பொறிக்கப்பட்ட மேட்கள் விற்பனை செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது  குறிப்பிடத்தக்கது. 

அதனால் தொடர்ந்து இந்து மக்களின் நம்பிக்கைகளை அவமரியாதை செய்து வரும் அமேசான் நிறுவனத்தின் மீது நொய்டா போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகின் முதல் ‘1 TB’ மெமரி கார்டு – விலை எவ்வளவு தெரியுமா ?