Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு ட்விட் – கமலை விடாத ஹெச் ராஜா !

Advertiesment
ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு ட்விட் – கமலை விடாத ஹெச் ராஜா !
, வெள்ளி, 17 மே 2019 (21:49 IST)
கமல் பேசும் ஒவ்வொரு கருத்துக்கும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா கருத்து தெரிவித்து வருகிறார்.

அரவக்குறிச்சியில் சில நாட்களுக்கு முன்னர் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் ’உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் கொள்ளுப்பேரன் அவரது கொலைக்கு கேள்வி  கேட்க வந்துள்ளேன். இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும் என்றும், தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு’ என்று  கூறினார். இந்த கருத்து அகில இந்திய அளவில் எதிர்ப்புகள் எழுந்தன.

அதையடுத்து கமலின் இந்த பேச்சுக்கு பாஜக மற்றும் இந்துத்வ அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து கமல் பிரச்சாரம் செய்யும் இடங்களில் செருப்பு வீசுதல் மற்றும் முட்டை வீச்சு போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இதனை அடுத்து கமல் தனது பிரச்சாரத்தை சமூகவலைதளங்களில் மேற்கொண்டு வருகிறார்.

தனது முகநூல் பக்கத்தில் ‘சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர் மத்திய / மாநில அரசுகள். மக்கள் எடுத்து விட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது. .12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ, “இந்து” என்கின்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தாராலோ “இந்து” என நாமகரணம் செய்யப்பட்டோம். ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர்.

நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் “பெயராக”, “மதமாகக்” கொள்வது எத்தகைய அறியாமை... நாம் “இந்தியர்” என்கின்ற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது. நாம், நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக / அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பிழையான தேர்வாகும்.
புரியலன்ற சோமாரிகளுக்கு....

“ கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம். “கோடி”ன்ன உடனே “பணம்” ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல, அரசியல்வாதி அல்ல. வெறும் வியாதி!! “தமிழா” நீ தலைவனாக வேண்டும்.  இதுவே என் வேண்டுகோள்.’ எனத் தெரிவித்தார். கமலின் இந்த பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக ஹெச் ராஜா ‘முஸ்லிம் என்ற அடையாளம் வேண்டாம் கிறித்தவர் என்ற அடையாளம் வேண்டாம் என்பாரா ? அவர்களுக்கு மட்டும் இந்தியர் என்ற அடையாளம் போதாதா? ஓ இவர் அழிக்க நினைப்பது இந்து அடையாளத்தை தான் என்பது தெளிவு.’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லி பல்கலையில் தமிழக மாணவர் தற்கொலை