Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிபில் ஸ்கோர் சரியாக இல்லை என்றால் வேலை கிடையாது: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Advertiesment
சிபில் ஸ்கோர்

Mahendran

, வியாழன், 26 ஜூன் 2025 (15:46 IST)
சிபில் ஸ்கோர் சரியாக இல்லாததால், ஸ்டேட் வங்கி  ஒருவருக்கு அளித்த பணி நியமன ஆணையை ரத்து செய்தது. இதை எதிர்த்து அந்த நபர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், "வங்கிப் பணிக்கு நியமிக்கப்படுபவர்கள் எந்தக் கடன் நிலுவைத் தொகையும் வைத்திருக்கக் கூடாது" என்ற வங்கியில் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்ததை SBI தரப்பு வாதமாக முன்வைத்தது.
 
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, "சிபில் ஸ்கோர் தெளிவாக இருக்க வேண்டும். பொதுமக்களின் பணத்தைக் கையாளும் நபர், பண விவகாரத்தில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சிபில் ஸ்கோர் சரியாக இல்லாதவர் மீது எப்படி நம்பிக்கை வைக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
 
எனவே, சிபில் ஸ்கோரை காரணம் காட்டி SBI நிர்வாகம் பணி நியமன ஆணையை ரத்து செய்தது செல்லும் என்று தீர்ப்பளித்தார். இந்தப் பரபரப்பான தீர்ப்பின் மூலம், வங்கியில் வேலை வேண்டுமென்றால் சிபில் ஸ்கோர் சரியாக இருக்க வேண்டும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாராசிட்டாமல் உள்ளிட்ட 14 மருந்துகளுக்கு தடை! - கர்நாடக அரசு அதிரடி!