போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

Siva
வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (18:17 IST)
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியர் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் அந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பெற்றோரை எதிர்த்து தாங்கள் திருமணம் செய்து கொண்டதாகவும் எனவே எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என்றும் 
ஸ்ரேயா என்பவர் மனு தாக்கல் செய்தார்.
 
இந்த மனு மீதான விசாரணை என்று நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது இரு தரப்பு வாதங்களுக்கு பின் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு போலீஸ் பாதுகாப்பு தர முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.
 
மேலும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து சமூகத்தை எதிர்கொள்ள பழகிக் கொள்ளுங்கள் என்று நீதிபதி அறிவுரை கூறினார்.
 
 காதலித்து திருமணம் செய்து கொள்ளுபவர்கள் எல்லோரும் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு வந்தால் காவல்துறையினர் மற்ற பணிகளை பார்க்க வேண்டாமா? நீதிபதி அளித்தது சரியான தீர்ப்பு தான் என இந்த தீர்ப்பு குறித்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments