ஊழியரின் மன உறுதியை அதிகரிக்க ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் ஊதிய உயர்வு அளித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 96,169 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 3,029 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் விளைந்த 50 நாட்களுக்கும் மேலான ஊரடங்கால் பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்தை குறைத்துள்ள நிலையில், ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம், ஊழியர்களின் மன உறுதியை அதிகரிக்க ஊதியத்தை அதிகரித்து வழங்கியுள்ளது.
இது குறித்து அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி அமித் சைங்கிள் தெரிவித்ததாவது, பங்குதாரர்களின் நலன்களை கருதும் உண்மையான தலைமை மற்றும் நிறுவனத்திற்கு எடுத்துக்காட்டாக நாங்கள் இருக்க நினைக்கிறோம். ஒவ்வொரு ஊழியரின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கான ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.