Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழர்களின் பிரபாகரன் திருமா: அப்போ அண்ணன் சீமான் யாரு?

Advertiesment
தமிழர்களின் பிரபாகரன் திருமா: அப்போ அண்ணன் சீமான் யாரு?
, திங்கள், 18 மே 2020 (16:43 IST)
தமிழர்களின் பிரபாகரன் திருமா என ஹேஷ்டேக் ஒன்று டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
 
மே 18 ஆன இன்று சர்வதேச இனப்படுகொலை நாள். எனவே திருமாவளவன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்களப்பௌத்தப் பேரினவாத வெறியர்களும் வல்லாதிக்கப் பேரரசுகளும் கூட்டாக நடத்தியகுரூரமான இனப்படுகொலை நிறைவேறியநாள். ஐநா பேரவையுடன் சர்வதேச மூகம் வேடிக்கைப் பார்த்த இன அழிப்பின் இறுதி நாள். ஈகம் செய்தயாவருக்கும் வீரவணக்கம்.
 
தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகிய கோட்பாடுகளைக் கோரிக்கைகளாக  வென்றெடுப்பதே தமிழீழ மக்களின் இலக்காக உறுதிப்பட வேண்டும். ஒடுக்குமுறையிலிருந்து மீள்வோம்! உயிர்த் தமிழீழம் ஆள்வோம்! என பதிவிட்டிருந்தார். 
 
இதனைத்தொடர்ந்து தமிழர்களின் பிரபாகரன் திருமா என ஹேஷ்டேக் டிரெண்டாகியது. இதில் சிலர் திருமா பிராபகரன் என்றால் அண்ணன் சீமான் யார் என கேள்வி எழுப்பியும் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெறிச்சோடிய மதுக்கடைகள்: கூவிக்கூவி அழைக்கும் டாஸ்மாக் ஊழியர்கள்