புதிய வருமான வரி திட்டத்தில் ஆண்டுக்கு 12 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வருமான வரி கிடையாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்றுமுன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அறிவிப்பு வந்துள்ளதை அடுத்து வருமான வரி கட்டுபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சற்றுமுன் அறிவித்த அறிவிப்பில் புதிய வருமான வரி திட்டத்தில் ஆண்டுக்கு 12 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வருமானவரி கிடையாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன்படி மாத சம்பளம் ஒரு லட்ச ரூபாய் பெறுபவர்கள் இனி வருமான வரி கட்ட தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய வரிவிகிதம் முழு விவரம்!
4,00,001 to 8,00,000 - 5%
8,00,001 to 12,00,000 - 10%
12,00,001 to 16,00,000 - 15%
16,00,001 to 20,00,000 - 20%
20,00,001 to 24,00,000 - 25%
24,00,000 மேல் - 30%
இந்த புதிய வருமான வரி சலுகை மூலம் நடுத்தர மக்கள் பயன்பெறுவார்கள் என்பதால் இந்த அறிவிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.